திருப்பத்தூர்-சேலம் சாலையில் திருப்பத்துர் அடுத்த 8-ஆவது கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ ராமானுஜர் மடம் தர்மசத்திரம் கட்டியுள்ளோம்.
கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் வழியாக திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி, சமைத்து, உண்டு, உறங்கிச் செல்ல கழிப்பறை மற்றும் குளியலறை வசதியுடன் தர்மசத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இது 2019 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் மடத்தில் திருப்பாவை பயிற்சி வகுப்பு, இலவச யோகா பயிற்சி, இலவச தையல் பயிற்சி வகுப்பு மற்றும் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
புரட்டாசி மாதங்களில் 5 வாரமும் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகின்றன. மேலும் மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தில் நூற்றந்தாதி சேவை, ஆழ்வார்கள் / ஆச்சாரியர்கள் திருநட்சத்திர விழாக்கள் மற்றும் மார்கழி மாதம் 30 நாளும் திருப்பாவை பாராயணம் நடைபெறுகின்றன.
திருப்பத்தூர்–சேலம் சாலையில் 8-ஆவது கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ ராமானுஜர் மடம் தர்மசத்திரம் கட்டப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் வழியாக திருமலைக்கு செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாற சமைத்து உணவு உண்டு உறங்க கழிப்பறை & குளியலறை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை 2019-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருப்பாவை பயிற்சி, இலவச யோகா, தையல் பயிற்சி மற்றும் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
புரட்டாசி மாதத்தில் 5 வாரமும் சிறப்பு பூஜை & அன்னதானம் நடைபெறுகின்றன.
திருவாதிரை நட்சத்திர சேவை, ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் திருநாள் விழாக்கள் மற்றும் மார்கழி 30 நாளும் திருப்பாவை பாராயணம் நடைபெறுகின்றன.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, சுமார் 1000+ பக்தர்கள் பலன் பெற்றுள்ளனர்.
பக்தி உணர்வை வளர்க்க தினசரி திருப்பாவை பயிற்சிகள்.
உடல் - மன நலம் மேம்பட இலவச யோகா பயிற்சி.
பெண்கள் சுயநிறைவு பெற தையல் பயிற்சி வகுப்புகள்.
தன்னம்பிக்கை வளர்க்க இலவச மேம்பாட்டு வகுப்புகள்.
தேனியை தலைமையாகக் கொண்டு ஜோதிடப் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்பட்டு வருகின்றன.